6. புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து.
7. செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.
8. செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
என்மார்க்கம் நின்மார்க்க மே.
9. நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.